திருச்சி--மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக போராட்டம்

59பார்த்தது
திருச்சி--மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக போராட்டம்
திருச்சி மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுகவினர் நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டம் செய்தனர். மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வை வதைக்கும் வகையில், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை 12மணி நேரம் செயல்படும் மதுபான கடைகளை திறக்கப்படுவதை கண்டித்தும், உறையூர் லிங்கநகர் பகுதியில் முன்னதாக செயல்பட்ட டாஸ்மாக் கடையை மூடி தற்போது அதே இடத்தில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூடக்கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.

இப்பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் தினசரி கோழி தொழிலாளியை வாழாதரம் பாதிக்கும். உடனடியாக மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி