ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

60பார்த்தது
ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.
மண்ணச்சநல்லூர் வணிகர்கள் சங்கத்தின் நலசங்கத்தின் சார்பில் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிகர்கள் நலசங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் ஶ்ரீதர் பங்கேற்று வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் ஆலோசகர் ஶ்ரீதர் கூறுகையில்
பல வரிவிதிப்பு செயல்முறைகளை நீக்குகிறது, வரி முறையை ஒழுங்குபடுத்துகிறது. எளிமையாகப் பயன்படுத்த புதிய வரிவிதிப்பு முறைகளை அறிமுகப்படுத்துகிறது. மோசடி நடைமுறைகளைத் தடுக்க கண்காணிப்பை மேம்படுத்துகிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் மென்மையான வரிவிதிப்பு செயல்முறையை உறுதி செய்கிறது என கூறனார். அதனைத்தொடர்ந்து வணிகர்கள் ஏற்படும் ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட சந்தேகத்தை கேட்டறிந்தனர். மண்ணச்சநல்லூர் இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் பிரசன்னா, பொருளாளர் வெங்கடேசன், ஆலோசகர்கள் மோகன்ராஜ், திருநாவுக்கரசு, மற்றும் வணிகர்கள், எஸ் கே மளிகை ஆனந்த, ஆண்டாள் சில்க்ஸ் முருகேசன், முருகன் டிரேடர்ஸ் கனகராஜ், அக்ஷயா ஸ்டோர்ஸ் தினேஷ்குமார் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி