துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் இவர் தனது நண்பர்களான கிஷோர்குமார் பூபதி சண்முகம் ஆகியோருடன் காரில் காளிப்பட்டி வாட்டர் சர்வீஸ் அருகே சென்று கொண்டிருந்தார். காரை தேவரப்பம்பட்டியைச் சேர்ந்த சரவணன் ஓட்டி வந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஐந்து பேரும் காயம் அடைந்து துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.