திருச்சி திருவெறும்பூர் ஆலத்தூர் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த பெட்டிக்கடை ஒன்றில் தர்மராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து 120 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.