தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழசிராமணி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவர் டிராக்டரில் கிராவல் மணல் கடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து ஜேசிபி வாகனம் ஒன்று டிராக்டர் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.