01. 10. 2024 அன்று சென்னையில் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான ஸ்குவாஷ் தகுதி போட்டியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹேமா (14வயது உட்பட்ட பிரிவில் ) தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா இம்மாணவிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இம்மாணவிக்கு திருச்சி சேவா சங்கத்தின் செயலர் சரஸ்வதி, பொருளாளர் லஷ்மி சுப்ரமணியன், உபதலைவி கமலா பண்டாரி, தலைமையாசிரியை நாகம்மை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியப்பிரியா, சந்தானபிரியா, குணசேகரன் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். பெற்றோர் மதுரைவீரன், மேனகா அவர்களையும் அனைவரும் பாராட்டினார்கள்.