பராமரிப்புப் பணிகள்: காரைக்கால் ரயில்கள் ரத்து

69பார்த்தது
பராமரிப்புப் பணிகள்: காரைக்கால் ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 8. 35 மணிக்குப் புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (06880) அக்டோபா் 1-31 (திங்கள்கிழமைகளைத் தவிா்த்து) ஆகிய நாள்களில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக, காரைக்காலில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2. 55 மணிக்குப் புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (06739) மேற்கண்ட நாள்களில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 6. 50 மணிக்குப் புறப்படும் திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலானது (06490) மேற்கண்ட நாள்களில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

காரைக்காலில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (06457) மேற்கண்ட நாள்களில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும். என்று அறுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி