விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரையத் தொகையினை வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ. 5. 00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத்தொகையினை தேசியபட்டியலினத்தோர் நிதிமேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6 % மிககுறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.