எட்டையபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார். இன்று(செப்.17) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக தூத்துக்குடிக்கு, நண்பர்கள் சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி (53), மதுரையைச் சேர்ந்த முகமது யாசின் ஆகிய 4 பேரும் காரில் வந்துள்ளனர்.
ரவிச்சந்திரன் காரை ஓட்டி சென்றுள்ளார். எட்டையபுரம் அருகே தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.