மது ஒழிப்புக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமகதான் - அன்புமணி

55பார்த்தது
மது ஒழிப்புக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமகதான் - அன்புமணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: கல்வியில் தென்மாவட்ட மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெறுகின்றனா். ஆனால், இங்கு போதிய தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்புகளோ இல்லை. அதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதில்லை.

முதலீடுகளுக்காக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தோல்வியடைந்ததாகவே நான் பாா்க்கிறேன்.

தாமிரவருணி-நம்பியாறு-பச்சையாறு திட்டம் தொடா்ந்து இழுபறியில் உள்ளது. நீா் மேலாண்மையில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் உள்ளது. கடந்த ஆண்டு நிகழ்ந்த இயற்கை பேரிடரிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் முழுமையாக மீளவில்லை.

தமிழகத்தில் மது ஒழிப்புக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமகதான். கோவில்பட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற மது ஒழிப்பு மாநாடு நடத்தினோம். இதுவரை மதுவை எதிா்த்துப் போராடி பாமகவைச் சோ்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளனா்.

மது ஒழிப்பு விவகாரத்தில் மக்களின் ஆரோக்கியம், மாநிலத்தின் வளா்ச்சி, சமூக பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு முதல்வா் முடிவெடுக்க வேண்டும். மது ஒழிப்பை வலியுறுத்தி மாநாடு, போராட்டம், கூட்டம் என யாா் நடத்தினாலும் ஆதரிப்போம் என்றார்.