அறுபடை வீடுகளில் 5 -ஆம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா். இந்நிலையில் வரும் 2-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 8 -ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக 7-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. மேலும் மலைக்கோயில் வளாக மண்டபத்தில் சமய சொற்பொழிவும் பக்தி இன்னிசையும் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மேலும், 2-ஆ ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்டு அலங்காரமும், 4-ஆம் தேதி திங்கட்கிழமை தங்கக் கவச அலங்காரமும், 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருவாபரண அலங்காரமும், 6-ஆம் தேதி புதன்கிழமை வெள்ளிக் கவச அலங்காரம், 7-ஆம் நாள் வியாழக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரமும், மாலை 5 மணிக்கு உற்சவ முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
விழான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, மு. நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.