லாரி மோதி மின் கம்பம் சாலையில் உடைந்து விழுந்து விபத்து

55பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட குமாரகுப்பம்  திருத்தணி-சித்தூர் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தை  கரும்பு லாரி  மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் திடீரென்று  மின் கம்பம் இரண்டாக உடைந்து சாலையோரத்தில் சாய்ந்தது. எப்போதும் வாகனங்களுடன் பரபரப்பாக காணபப்டும் மாநில நெடுஞ்சாலையில், குடியிருப்புகள் பகுதியில் மின் கம்பம் மீது லாரி மோதி உடைந்து விழுந்ததால் அப்பகுதி குடியிருப்போர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகளுக்கு எச்சரித்து வாகனங்கள்   தூரமாக நிறுத்தப்பட்டது. மின்வாரிய  அதிகாரிகளுக்கு தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மின் இணைப்பு துண்டித்து சாலையோரத்தில் விழுந்த மின் கம்பத்தை அகற்றி போக்குவரத்து பாதிப்பு சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் 1மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக  மின்வாரியத் துறை சார்பில் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி