திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
குண்ணமஞ்சேரி முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நிறைவு கிராம மக்கள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிமாத ஐந்தாவது வார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக கைலாய வாத்தியம் இசைக்க மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கரகம் சுமந்து சாமியாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமான வேப்பிலை ஆடை தரித்து அம்மனுக்கு நேர்ந்த பக்தர்கள் அதை செலுத்தி அம்மனை வழிபட்டனர். திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை மூன்றுமுறை வலம்வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவாக முத்து மாரியம்மனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மகிஷாசுரமர்த்தினி அவதாரத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.