திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கவரப்பேட்டை பகுதியிலுள்ள எஸ். வி. கே. திருமண மண்டபத்தி ல் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய, நகர, பேருர் அமைப்பாளர்கள், மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாள ரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி. ஜே. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் எஸ் மோகன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் மன்னை த. சோழராஜ ன் ஆகியோர் கலந்துகொண்டு பொறுப்புகளுக்கான நேர்காணலை நடத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்.