திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் சுகபுத்ரா இன்று(அக்.01) 15வது வார்டு பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குடிநீர் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள அலுவலர்களிடம் பல்வேறு ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.