போடியில் வியாபாரி வீட்டில் டிவி, கிரைண்டர் திருட்டு

60பார்த்தது
போடியில் வியாபாரி வீட்டில் டிவி, கிரைண்டர் திருட்டு
தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (35 வயது). சென்னையில் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.15) போடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து டிவி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி