தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்தனம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இன்று (அக். 08) வழங்கினார். இந்த நிகழ்வில் முத்தனம்பட்டி பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.