திருச்சி மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் திருச்சியிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த்தாமலை. மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, உவக்கன் மலை, பறையர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன்மலை என ஒன்பது வகையான மலைக் குன்றுகளால் சூழப்பட்ட மலைத்தொடர் இது. இம்மலைகளில் பல அரிய மூலிகைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.