போதையின் தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. மது மற்றும் போதைப்பொருள் நுகர்வு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிதல், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான ஆதார அடிப்படையிலான திட்டங்களை வகுத்தல் ஆகியவை இந்த ஆய்வின் நோக்கமாகும்.