திருவையாறு அருகே செந்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு பிரகாஷ் தலைமையில் நடந்தது. உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய குழு பழனிஅய்யா, கதிரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாக்கியராஜ் அஞ்சலி தீர்மானமும், கிளை செயலாளர் சங்கர் வேலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கிளை நிர்வாகிகள் செண்பகவள்ளி, வாசுதேவன், செந்தில், குமார், பிரஷ்னேவ் ரெங்கசாமி, சாமி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி கூலி ரூ. 319 வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.