விவசாயிகள் தலைவர் பி.எஸ்.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

64பார்த்தது
விவசாயிகள் தலைவர் பி.எஸ்.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
விவசாயிகளின் தலைவர் பி. எஸ். ஆர் என அன்போடு அழைக்கப்படும் பி. சீனிவாசராவ், 63 ஆவது ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூர் கணபதி நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில்,   அலங்கரிக்கப்பட்ட தோழர் பி. எஸ். ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  

நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என். சீனிவாசன், பி. எஸ். ஆர் குறித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார், என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என்.சிவகுரு, மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், அரங்கத் நிர்வாகிகள் இரா. புண்ணியமூர்த்தி, ஆர். பன்னீர்செல்வம், ஜீவா,மாநகரக்குழு எம்.கோஸ்கனி, அரங்க நிர்வாகிகள், கட்சி முன்னணியினர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி