தஞ்சை: கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம்

67பார்த்தது
தஞ்சை: கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம்
தஞ்சாவூர் மானோஜிபட்டி சரஸ்வதி நகரைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகன் பாரதிராஜா (25). இவரை கஞ்சா வழக்கு தொடர்பாக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஏற்கெனவே கைது செய்தார். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் பாரதிராஜாவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதன் பேரில் பாரதிராஜாவை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி