பள்ளிச் சிறார்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா

61பார்த்தது
பள்ளிச் சிறார்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, வீரியங்கோட்டை, ராஜராஜன் பள்ளியில், பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் - ராஜராஜன் கல்வி நிறுவனம் சார்பில், பள்ளிச் சிறார்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

லயன்ஸ் சங்கத் தலைவர் நா. ப. ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. குமரன் வரவேற்றார். ராஜராஜன் கல்வி நிறுவனத் தலைவர் மனோன்மணி ஜெய்சங்கர், திருச்சி எஸ். கந்தசாமி ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தனர். மாவட்ட இணைப் பொருளாளர் எம். நீலகண்டன், மாவட்ட தென்னை வளர்ச்சிக்குழு தலைவர் பொறியாளர் லெ. க. இளங்கோ, வட்டாரத் தலைவர் எஸ். பாண்டிய ராஜன், மாவட்ட நிர்வாகி ஏ. எஸ். ஏ. தெட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் வ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக சங்க பொருளாளர் ஆவி. ரவி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி