முடச்சிக்காடு பள்ளிவாசல் சாலையில் அமர்ந்து மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க டிஎன்டிஜே அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் முடச்சிக்காடு கிளை சார்பில் ஓரிறைக் கொள்கை விளக்க கூட்டம் முடச்சிக்காட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மாவட்டப் பேச்சாளர் பாரீஸ்கான் சமரசமற்ற சத்தியக்கொள்கை என்ற தலைப்பிலும் , மாநிலப் பேசசாளர் அப்துர்ரஹ்மான் இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் நபி என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முடச்சிக்காடு பள்ளிவாசல் சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியும், சாலையின் இருபுறமும் மின் விளக்கு அமைத்து தர ஊராட்சி நிர்வாகத்தை கேட்டும், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளை தலைவர் சாகுல் நன்றி கூறினார்.