காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை சார்பில், செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பொருளாளர் பக்கிரிசாமி, நிர்வாகிகள் குலோத்துங்கன், கே. கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம், மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.