தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட கலிங்கபட்டி பஞ்சாயத்து வீராணபுரம் கிராமத்தில் இன்று (அக்.,1) 300-க்கு மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமொழி சந்துரு தலைமை வகித்தார். குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதையை நட்டு துவக்கி வைத்தார்.
இதில் வீராணபுரம் மதிமுக கிளை செயலாளர் காளிராஜ், பணித்தள பொறுப்பாளர் பெருமாள் சாமி, தேசிய ஊரக வேலை பணியாளர்கள் மற்றும் மதுரிதா அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகரன் 300 பனை விதைகளை வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.