மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கிய மகன் கைது

71பார்த்தது
மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கிய மகன் கைது
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தளம் பாறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மது வாங்குவதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.

அவரது தாய் பணம் தர மறுத்ததால் அவரை அசிங்கமாக பேசி கையால் தாக்கி தாய் மற்றும் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டு மாரிமுத்து (24) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி