தென்காசி தூயமிக்கேல் அதி தூதர் ஆலய பெருவிழா கடந்த 20ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பங்குத் தந்தையர்கள் பங்கேற்று நவநாள் திருப்பலி நடந்தது.
நேற்று(செப்.28) காலை ரெங்கசமுத்திரம் பங்குத்தந்தை செல்வராஜ், சேரன்மகாதேவி சன் ரைஸ் இயக்குனர் ஜோதிராஜ் தலைமையில் நவநாள் திருப்பலியும், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்டம் ஜாய்சி மேத்யூ, பெங்களூர் ஜெரோம் சத்யன் தலைமையில் மலையாள திருப்பலியும், புனலூர் புனித அலாய் சியஸ் குறுமடம் அதிபர் வின்சென்ட் டிக்குரூஸ் தலைமையில் குணமளிக்கும் வழிபாடும் நடந்தது.
நேற்று இரவு பாளை மறை மாவட்டம் முதன்மை குரு குழந்தைராஜ், வெய்காலிப்பட்டி புனித வளனார் கல்லூரி செயலர் சகாய ஜான் தலைமையில் அதிதூதரின் தேர் பவனி நடந்தது. இதில் வட்டார அதிபர் போஸ்கோ குணசீலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தேர் பவனி ஆலயத்தில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.