தமிழ்நாட்டிற்கு இரண்டை மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என
பிரதமர் மோடி தெரிவித்தார். திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய
பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்கிறது; 2014ம் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு எவ்வளவு நிதி பெற்றதோ அதனை விட இரண்டரை மடங்கு அதிக நிதி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.