17 வயது சிறுமி மாயம்.. போலீசார் விசாரணை

79பார்த்தது
17 வயது சிறுமி மாயம்.. போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் இருந்தவர் திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் இளையான்குடி காவல் நிலையத்தில் 17 வயது சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜோதி முருகன் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி