செந்தில் பாலாஜி வழக்கு 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

105945பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத் துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க அவகாசம் கேட்கப்பட்டது.