மலை உச்சியில் செல்ஃபி.. புதுப்பெண் உயிரிழப்பு

45597பார்த்தது
மலை உச்சியில் செல்ஃபி.. புதுப்பெண் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்த புதுமணத் தம்பதி விநாயக் பாட்டீல் சுபாங்கி. இவர்களுக்கு கடந்த 8ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி தேனிலவுக்காக பிரபல்காட் கோட்டைக்கு சென்றுள்ளனர். பன்வெல், மாதேரான் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 2,300 அடி உயரத்தி இந்த கோட்டையானது அமைந்துள்ளது. செங்குத்தாக ஏறி தான் இந்த கோட்டைய அடைய முடியும். அதன் மீது எரிய தம்பதிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது சுபாங்கி தவறி விழுந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 200 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தாத மருத்துவர்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி