காடையாம்பட்டி வக்கீல்கள் சங்க கூட்டம்

56பார்த்தது
காடையாம்பட்டி வக்கீல்கள் சங்க கூட்டம்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வக்கீல்கள் சங்க கூட்டம் ஓமலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மூத்த வக்கீல்கள் மாதேஸ்வரன், பெருமாள்சாமி, இளங்கோவன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி எழிலரசு (தலைவர்), ஜி. சங்கரநாராயணன் (செயலா ளர்), சீனிவாசன் (துணைத்தலைவர்), ராஜகுரு (பொருளா ளர்), அருண்குமார் (இணைச்செயலாளர்), அறிவானந்தகுமார் (துணைச்செயலாளர்), வீரமணி (நூலகர்) மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக செட்டி சித்தன், சுசீந்திரகுமார், விக்னேஷ். பிரசாந்த், மகேஸ்வரி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்த வக்கீல்கள் மட்டும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் இணைந்து பணியாற்றுவது, காடையாம்பட்டி தாலுகாவில் புதிய கோர்ட்டு விரைவில் திறக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you