விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருத்துவ உதவியாளர் பிரிவின் மூலம் தேசிய அளவிலான கருத்தரங்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதல் படி நடந்தது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நாகப்பன் பங்கேற்று பேசினார். பல்கலைக்கழகத்தின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைப்பின் இயக்குனர் ஞானசேகர், கல்வியியல் இயக்குனர் ராஜன் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கேரளா அமிர்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி உதவி பேராசிரியர் எபின் ஆபிரகாம், மதுரை மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், விம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குனர் அசோக், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்கர் ஆகியோர் நவீன மருத்துவ சுகாதாரம் சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர்.
இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொழில் நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு படவிளக்க காட்சி மற்றும் ஆராய்சி கட்டுரை சமர்ப்பித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.