சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). விவசாயி. இவர் கடந்த 4-ந் தேதி உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது 6 பவுன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கோவை மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த தர்மகுமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (23) ஆகிய இருவரும் கணேசன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மீட்கப்பட்டது. கைதான 2 பேர் மீதும் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.