சேலம் சி. எஸ். ஐ பாலர் ஞான இல்லத்தில் அரசு நிதியுதவி பெறும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் நிர்வகிக்கப்படும் சி. எஸ். ஐ. பாலர் ஞான இல்லத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் இணைந்து 118 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உற்பத்தி செய்த பொருட்களை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ராதிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட மனநல மருத்துவர் விவேகானந்தன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.