தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக அமைச்சர் ராஜேந்திரன் இன்று (அக.,4), சென்னையில் இருந்து ரெயில் மூலம் சேலத்திற்கு காலை 11 மணிக்கு வருகிறார். இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரனுக்கு, மாவட்ட தி. மு. க. மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர், சேலத்தில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பொதுமக்களை சந்திக்கிறார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், மாநகர், பகுதி, கோட்டம், நகர, ஒன்றிய, பேரூர் கிளை மற்றும் வார்டு தி. மு. க. செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.