ஜலகண்டாபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி- அதிகாரி ஆய்வு

68பார்த்தது
ஜலகண்டாபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி- அதிகாரி ஆய்வு
சேலம் மாவட்டம் தாரமங்கலம்- ஜலகண்டாபுரம் சாலை, வெண்ணானம்பட்டி சாலை சந்திப்பு ஆகிய பகுதிகள் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளன. எனவே, சாலை விபத்தை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும் அங்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, எடப்பாடி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம், ஓமலூர் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.