கெங்கவல்லி: ஜாக்டோ ஜியோ போராட்டம்; வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்

72பார்த்தது
பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் காரணமாக சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் இல்லாமல் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலர்கள் யாரும் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.