சேலம் அம்மாபேட்டையில் பள்ளி சிறுவன் மாயம்

82பார்த்தது
சேலம் அம்மாபேட்டையில் பள்ளி சிறுவன் மாயம்
சேலம் அம்மாபேட்டையில் உள்ள நஞ்சம்பட்டியை சேர்ந்தவர் நைனாமலை. இவரது மகன் நவின் (16). இவர் நஞ்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி மாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் நவின் வீடு
திரும்பாததால் அச்சமடைந்த அரவது தாய் சுதா(35) தனது மகன் சிறுவனை காணவில்லை என அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்திவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் போலீசிடம் தகவல் தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி