சேலம் மணியனூரில் வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது

52பார்த்தது
சேலம் மணியனூரில் வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது
சேலம் மணியனூர் மதுரை வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 22). கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் தனது செல்போனை அருகில் வைத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. வீடு புகுந்த மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வீடு புகுந்து செல்போன் திருடியது கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற காக்கா வெங்கடேஷ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி