தம்மம்பட்டியில் 25-ந் தேதி ஜல்லிக்கட்டு

57பார்த்தது
தம்மம்பட்டியில் 25-ந் தேதி ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி மற்றும் உலிபுரத்தில் ஆண் டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள் ளது. அதே போல் தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு வருகிற 25-ந் தேதியும் நடக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத் தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் பிரியதர் ஷினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்கு மார், தீயணைப்பு துறை அலுவலர் அசோகன், கால்நடைத் துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, இந்து அறநிலை யத்துறை மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் பங்கேற்ற னர்.

விழாக்குழுவினர் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குறித்தும், விதிமுறைகள் மற்றும் வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த போட்டிகளை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் நடக்க விழாக்குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற விழாக்குழு வினரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி