பொன்னமராவதி: அதிமுகவினர் நாற்று நடும் போராட்டம்!

78பார்த்தது
பொன்னமராவதி: அதிமுகவினர் நாற்று நடும் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணியால் அண்ணாசாலை குண்டும், குழியுமாக மாறி கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதை கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது
இளைஞரணி நிர்வாகி குமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் காசி. கண்ணப்பன், சரவணன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிதிலமடைந்த சாலையில் நாற்று நட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி