கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சியில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதற்கு ரூ. 8. 50லட்சம் மதிப்பீட்டில் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.