புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேட்டனூர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதிமொழி எடுத்தனர். சாலை வசதி செய்து தராத காரணத்தினால் தங்களுடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.