புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த தகவலை எடுத்து ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.