காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று (அக் 1) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அரசு மருத்துவமனையின் மேம்பாடு குறித்து மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இருவர் கலந்து கொண்டனர். மேலும் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து மருத்துவ அதிகாரியிடம் ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.