நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்தி பால் தயிர் மஞ்சள் குங்குமம் போன்ற வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.