நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம் மற்றும் மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் அவர்களின் பட திறப்பு விழா நடைபெற்றது.
மேக்னம் தொண்டு நிறுவனத்தின் இராசிபுரம் தலைமை அலுவகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவர் பொன்குமார் அவர்கள் தலைமையில் மேக்னம் நிறுவண பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் , கட்டுமான தொழிலாளர்களுக்கான அரசு திட்டங்கள் அதனை எவ்வாறு அடிதட்டு மக்களுக்கு கொண்டு செல்லுவது குறித்து விளக்கம் அளித்தார்.