தொழு நோயிலிருந்து மீண்டவா்களுக்கு உலா்உணவு பொருள்கள் வழங்கல்

74பார்த்தது
தொழு நோயிலிருந்து மீண்டவா்களுக்கு உலா்உணவு பொருள்கள் வழங்கல்
பொத்தனூா் வோ்டு நிறுவனம் மற்றும் மும்பை தி சம்தசனி பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து கபிலா்மலை, பரமத்தி வேலூா் வட்டாரத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு உலா் உணவு பொருள்கள் வழங்கும் விழா, பரமத்தி வேலூரில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூா் பேரூராட்சி தலைவா் லட்சுமி முரளி தலைமை வகித்து, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு உலா் உணவு பொருள்களை வழங்கினாா். வோ்டு நிறுவன செயலாளா் சிவகாமவல்லி வரவேற்றுப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள் நிா்மல் நித்தியகுமாா், மருத்துவா் குணஷீலா ஆகியோா் கலந்து கொண்டு தொழுநோய் எவ்வாறு பரவுகிறது? அதற்கான சிகிச்சை, அரசின் மூலம் கிடைக்கும் உதவிகள் குறித்து எடுத்து கூறினாா். வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சாந்தி நன்றி கூறினாா்.

தொடர்புடைய செய்தி